கர்ப்பமான காதலியை கொடூரமாக கொன்ற இளைஞர்! அதிர்ச்சி சம்பவம்
மலேசிய நாட்டில் சிலாங்கூர், சுங்கை பெசாரில் உள்ள பாமாயில் தோட்டப் பகுதியில் தீயில் எரிந்த நிலையில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் குறித்த பெண்ணை அழைத்துக்கொண்டு, தோட்டப்பகுதிக்கு காரில் சென்றதாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபரும் கொலை செய்யப்பட்ட பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பெண் கருவுற்றுள்ளார்.
இதனையடுத்து கர்பத்தை தக்கவைத்துக் கொள்வது சம்பந்தமாக அவர்களுக்குள் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே சந்தேகநபர் பெண்ணை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொலை நடந்த தினம் இரவு 10 மணிவரையில் அந்த பெண் தாக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் காதலியின் வயிற்றை சமையலறை கத்தியை பயன்படுத்தி கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அந்த பெண்ணை எரியூட்டியுள்ளார். அதற்கு முன்பதாக அந்த பெண்ணின் குடலை அவர் அகற்றியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கொலை செய்வதற்கு முன்பதாக போதை பொருள் பயன்படுத்தினாரா என்றும் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
எனினும், சோதனை முடிவுகள் நெகடிவாக அமைந்துள்ளது. அதேநேரம் அவர் இதற்கு முன்பு எந்த குற்றமும் செய்ததில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக அவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.