ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன்
வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கதிரான பாலத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞன் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து, 07 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முத்துராஜவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி முச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.