கடலில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் அதிரடி கைது
கற்பிட்டி, இப்புன்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 935,000 போதை மாத்திரைகளுடன் டிங்கி படகு ஒன்றையும், சந்தேக நபர் ஒருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்
வடமேற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால், கற்பிட்டி இப்புன்தீவு கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

போதை மாத்திரைகள்
அவ்வேளை கடலில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகை ஆய்வு செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி, குரக்கன்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.
தகாத உறவிலிருந்தவருடன் உல்லாசம் ; இறுதியில் கணவன் அரங்கேற்றிய கொடூரம் ; சாக்குபையில் காத்திருந்த ஷாக்
இந்த சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட டிங்கி படகு மற்றும் போதை மாத்திரைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.