கண் துடிக்கின்றதா அப்போ உங்களுக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்
கண் துடிப்பது குறித்து அறிவியல் காரணங்கள் கூறினாலும், பலரும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகின்ற சில எதிர்கால பலன்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஜோதிடத்தின் அடிப்படையில் வலது அல்லது இடது கண் துடித்தல், கண் துடிக்கக்கூடிய நேரம், அவரின் பாலினம் ஆகியவை பொறுத்து பலன்கள் மாறும் என சில கோட்பாடுகளுடன் கூடிய நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றன.
ஆண்களுக்கு வலது கண் துடித்தால்
அதனால் ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது என்று அறிகுறியாகும் என்று கூறப்படுகின்றது.
பொதுவாக உங்களின் வியாபாரம், தொழில், வேலை போன்ற விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.
ஆண்களுக்கு இடது கண் துடித்தால்
அது மோசமானதாகப் பார்க்கப்படுகிறது. கடினமான நேரமாக அமையும். எனவே இடது கண் துடித்தால் ஆண்கள் கவனமாக இருப்பது நல்லது என்று கூறப்படுகின்றது.
பெண்களுக்கு கண் துடித்தால் என்ன பலன்?
பெண்களுக்கு வலது கண் துடித்தால்
அது கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அன்றாட விஷயங்களில் சில மோசமான விஷயங்களும், மோசமான செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.
பெண்களின் இடது கண் துடித்தால்
அவர்களுக்கு மிகவும் சுபமானது. குடும்பத்தில் நல்ல செய்தி கிடைக்கும். அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.