என்ன செஞ்சாலும் தொப்பை குறையலயா? இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்

Weight Loss Healthy Food Recipes Exercises Life Style
By Viro Mar 25, 2026 12:42 AM GMT
Report

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்றால், அது தொப்பைதான். பருமனாக இருப்பவர்களுக்குத்தான் என்றில்லை... ஒல்லியாக இருப்பவர்களுக்கும்கூட தொப்பை இருக்கும்.

உண்மையில் தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பு என்பது குறைப்பதற்கு (கரைவதற்கு) கடினமானதாக இருக்கும். என்னதான் அன்றாடம் உடற்பயிற்சி செய்து, நல்ல டயட் பின்பற்றினாலும் சில நேரங்களில் அவை கரையவே கரையாது.

என்ன செஞ்சாலும் தொப்பை குறையலயா? இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள் | Your Belly Won T Reduce Do These Exercises Daily

காலை நேர உடற்பயிற்சிகள்

அதற்கு காரணம், உடலின் பிற இடங்களிலுள்ள கொழுப்புகள் எல்லாம் கரைந்த பின்னரே, இந்த உள்ளுறுப்புக் கொழுப்பு கரையும்.

ஒரு சில காலை நேர உடற்பயிற்சிகள், உடலில் வளர்சிதை மாற்றங்களை வேகப்படுத்துவதால், நாள் முழுக்க உடலில் கலோரி எரிப்பை ஊக்கப்படுத்தும். இதன்மூலம் தொப்பை கொழுப்பும் விரைவில் கரையும். இந்த காலை நேர உடற்பயிற்சிகள் என்னென்ன, இவை எப்படி தொப்பையை குறைக்க உதவும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்

பிளாங்க்: பார்ப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும், இவை உடலின் முக்கிய தசைகளின் வலிமையை உறுதிசெய்யும் முக்கியமான உடற்பயிற்சி. வயிற்றுப் பகுதியை இறுக்கமாக்க உதவும் முக்கியமான பயிற்சி இது. முதுகு, தோள்பட்டை, பின் முதுகு என உடலின் அனைத்து பகுதியும் இப்பயிற்சியில் வலிமை பெறும். இது நேரடியாகக் கொழுப்பை எரிக்காவிட்டாலும், தசைகளை உறுதியாக்கி வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் தொப்பையைக் குறைக்க உதவுகிறது.

என்ன செஞ்சாலும் தொப்பை குறையலயா? இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள் | Your Belly Won T Reduce Do These Exercises Daily

பைசைக்கிள் க்ரன்சஸ்: தொப்பை குறைந்து, இடுப்புப் பகுதி பொலிவுற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த பயிற்சி. இது மேல் வயிறு, கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டுத் தசைகள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் வேலை செய்ய வைக்கிறது என்பதால், இப்பயிற்சியை ஒரு சீரான வேகத்தில் செய்யும்போது, அடிவயிற்றுத் தசைகள் இறுகி, தொப்பை குறையத் தொடங்கும்.

மௌண்ட்டைன் க்ளைபர்ஸ்: இப்பயிற்சி கீழ் வயிற்றுத் தசைகளை வலுப்படுத்தி, தொப்பையை குறைத்து வயிற்றுப்பகுதியைத் தட்டையாக்க உதவுகிறது. இப்பயிற்சி செய்யும் போது உடல் எடையைக் கைகளில் தாங்குவதால், கைகள் மற்றும் தோள்பட்டைத் தசைகள் உறுதியாகும்.

ஜம்பிங் ஜாக்ஸ்: இந்தப் பயிற்சி 'மெட்டபாலிக்' விகிதத்தை விரைவாக உயர்த்துகிறது. அன்றாடம் 10 நிமிடங்கள் சரியாக ஜம்பிங் ஜாக்ஸ் செய்வதன் மூலம் சுமார் 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். மேலும் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க இது உதவுவதால், எடை இழப்புக்காக உழைப்பவர்கள் இதை தங்களின் அன்றாட பயிற்சியில் சேர்த்துக் கொள்ளலாம்.

என்ன செஞ்சாலும் தொப்பை குறையலயா? இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள் | Your Belly Won T Reduce Do These Exercises Daily

ரஷ்யன் ட்விஸ்ட்ஸ்: இடுப்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கு இது மிகச்சிறந்த பயிற்சி. மட்டுமன்றி, முதுகெலும்பின் உறுதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் இப்பயிற்சி, உடலின் மையப்பகுதியை நிலைநிறுத்திச் சமநிலைத் தன்மையை அதிகப்படுத்தும்.

பர்பீஸ்: அதிக கலோரிகளை எரிப்பதற்கு உதவும் மிகச்சிறந்த கார்டியோ பயிற்சியான இது ஒரே நேரத்தில் கை, மார்பு, வயிறு மற்றும் கால் தசைகளை வேலை செய்ய வைக்கிறது. பர்பீஸ் செய்யும் போது உடல் அதிகப்படியான ஆற்றலைப் பயன்படுத்துவதால், சாதாரணப் பயிற்சிகளை விட நிமிடத்திற்கு அதிக கலோரிகளை எரித்து தொப்பை குறைய உதவும்.

லெக் ரைசஸ்: அடிவயிற்றுத் தொப்பையைக் குறைப்பதற்கும், அந்தப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்துவதற்கும் மிகச்சிறந்த பயிற்சியாக இது இருக்கும். மற்ற பயிற்சிகளால் எளிதில் குறைக்க முடியாத கீழ் வயிற்றுத் தொப்பையை இது குறைக்கும். மட்டுமன்றி, இடுப்புப் பகுதி மற்றும் முதுகெலும்பின் கீழ் பகுதியை வலுப்படுத்தும். ஆகவே இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் தொப்பை குறைந்து வயிறு தட்டையாகும். 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US