தமிழர் பகுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு ; விசாரணையில் வெளியான முக்கிய தகவல்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 பகுதியில் 35 வயதுடைய பெண்ணொருவர் தவறுதலான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர் கடந்த 20 வருடங்களாக மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

பெண்ணின் சடலம்
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவுக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.
மேலும், சம்பவ இடத்திற்கு அம்பாறை குற்றதடயவியல் பிரிவு பொலிஸாரும் வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்