4 நாட்களில் 5 கிலோ எடை குறைத்த இளம்பெண் ; இறுதியில் நடந்த அதிர்ச்சி
சீனாவில் 28 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் வாங்கிய எடை இழப்பு ஊசிகளைப் பயன்படுத்திய சில நாட்களிலேயே இரத்த வாந்தி எடுத்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியாங்சு மாகாணம், சுசோவில் வசிக்கும் சென் என்ற பெண், சமூக ஊடகங்களில் நண்பர் ஒருவர் பகிர்ந்த விளம்பரத்தைப் பார்த்து, “ஒவ்வொரு ஊசியும் குறைந்தது 3.5 கிலோ எடையை குறைக்கும்” என்ற வாக்குறுதியை நம்பி, மூன்று ஊசிகளுக்கு 900 யுவான் செலுத்தினார்.

எடை இழப்பு ஊசி
தனக்கு இருந்த பயம் மற்றும் எச்சரிக்கை காரணமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட பாதியை மட்டுமே அவர் எடுத்துக் கொண்டுள்ளார்.
ஆனால், அதனை போட்டுக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற பிரச்சனைகள் தொடங்கின. ஆனால், “இது சாதாரண பக்க விளைவாக இருக்கலாம்” என்று நினைத்து அவர் சிகிச்சையைத் தொடர்ந்துள்ளார்.
நான்கு நாட்களில் மட்டும் மொத்தமாக 5 கிலோ வரை குறைந்தது”. ஆனால், நிலைமை திடீரென மோசமடைந்துள்ளது. மருத்துவர்கள் நான் உயிருக்கு ஆபத்தான நிலையைத் தாண்டி வந்ததை உறுதிப்படுத்தினாலும், உடலில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால் குறைந்தது ஒரு வருடம் கருத்தரிக்க முயற்சிக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், “ஆன்லைனில் கிடைக்கும் எடை இழப்பு மருந்துகள், ஊசிகள் அல்லது விரைவான முடிவுகள் என்று வாக்குறுதி அளிக்கும் அனைத்து தயாரிப்புகளும் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது” என்ற கடுமையான எச்சரிக்கையை நினைவூட்டுகிறது.