வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சிக்கிய யுவதி
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கைப் பயணி ஒருவரை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை
27 வயதான அந்தப் பெண் கடவத்தை சூரியபலுவ பகுதியில் வசிக்கும் ஒரு அழகுக்கலை நிபுணர் ஆவார்.
அவர் நேற்று (22) பிற்பகல் 03.30 மணிக்கு துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8D-824 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன் போது இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளில் குறித்த பெண்ணின் பயணப்பொதியிலிருந்து 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பெண் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை (25) நீர்கொழும்பு நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.