இலங்கையில் கணவனால் கொடூரமாக சுட்டுகொல்லப்பட்ட இளம் மனைவி: வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்
இரத்தினபுரி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் கடந்த வாரம் (26) இரவு 7.30 மணியளவில் 123, 5 வது லேன், கரதமண்டிய, எம்பிலிபிட்டிய புதிய நகர பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான இந்திரா மல்காந்தி (35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் இக்கொலை தொடர்பில் தெரியவருவது,
எம்பிலிப்பிட்டிய, புதுநகரில் இளம் மனைவியை கொலை செய்த குற்றவாளியான கணவர் உடவலவையில் மலர்ச்சாலை நடத்திவரும் கோடீஸ்வர தொழிலதிபரவார். கொலையாளி கணவர் தம்மிக குமார என்ற அனுர (47). என்பவருக்கு கொலை செய்யப்பட்ட இளம் மனைவியுடன் இரண்டாவது திருமணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக தகராறு இடம்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் கணவனின் கொடுமைகள் தாங்க முடியாமல் எம்பிலிப்பிட்டிய தர்ஷனகம பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியுள்ளார்.
மேலும் கணவனுடன் இனி வாழ முடியாது விவாகரத்துக்குத் தயாராகி வருவதாகவும், அதற்கான ஆவணங்களை தயார் செய்துள்ளதாகவும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பலமுறை கணவன் தொலைபேசியில் மனைவிக்கு தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மேலும் உடனடியாக வீட்டிற்கு வர்வில்லை என்றால் உன்னைக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதேவேளை கொலை இடம் பெறுவதற்கு முதல் நாள் இரவு ஏழு மணியளவில் குழந்தைகள், தம்பி மற்றும் தம்பியின் மனைவியுடன் கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது மீண்டும் குறித்த கணவன் மனைவிக்கு இடையே தகராறு இடம்பெற்றுள்ளது. இளம் மனைவியை கடுமையாக குற்றம்சாட்டிய கணவன் அவரை வீட்டிலேயே இருக்கும்படி கூறியுள்ளார்.
மனைவி கணவனின் கூறியதை மறுத்துவிட்டு சகோதரனுடன் மீண்டும் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார். இதன்போது மனைவியின் சகோதரனை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு மனைவியை மட்டும் வீட்டில் தங்க வைக்க முயற்சித்துள்ளார்.
இதேவேளை மனைவி எனது சகோதரனை வீட்டை வீடு அனுப்பவேண்டாம் என கணவனிடம் கேட்டுள்ளார். இருப்பினும் கணவன் மனைவியின் சகோதரனை வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் சகோதரன் சென்றதும், அவரின் பின்னாலேயே தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றுள்ளார்.
இதன்போது கணவன் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மனைவியின் முகத்தை திருப்பி நெற்றியில் சுட்டுள்ளார். இதன்போது அருகில் இருந்த சகோதரனால் எதும் செய்ய முடியவில்லை.
கணவனால் கைத்துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் வீதியில் வீழ்ந்த பெண்ணை எம்பிலிப்பிட்டிய பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவர் மரணமடைந்துள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது கணவன் எங்கு தப்பி செல்லவில்லை எனவும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த கைதுப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர். இதேவேளை கொலையாளியான கணவனின் வீட்டில் இருந்த சிசிரிவி கமரா அமைப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் முற்றிலும் உடைந்து காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொலை குற்றவாளியை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.