பேராதனை பல்கலைக்கழகத்தின் இளம் மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 4ம் வருட இளங்கலை பட்டதாரியான 26 வயதுடைய யுவதி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், ரிதிகம பிரதேசத்தை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழக மாணவி நேற்று முன்தினம் சுகயீனம் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.