குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; எதிர்காலத்துக்காக பலர் செய்த நெகிழ்ச்சி செயல்
நக்கிள்ஸ் மலைத்தொடர் வனப்பகுதியில் உள்ள குகையொன்றிற்குள் குழந்தையைப் பிரசவித்த நிலையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமிக்கும் அவரது பச்சிளம் குழந்தைக்கும் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் நலன்புரி உதவிகளையும் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதேவேளை, வேறு சில பிரமுகர்களும் இப் பெண்ணுக்கு உதவியளிக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக பெண்ணின் கல்விக்கு ஊக்கமளித்து நிதியதவி வழங்கவுள்ளதாக பலர் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
05 மாதங்களுக்கு முதல் காணாமல் போயிருந்த குறித்த சிறுமி, சென்ற 14 ஆம் திகதி மீமுரே பகுதிக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதி குகையொன்றிலிருந்து இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் உடுதும்பர பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.
எவ்வித அடிப்படை மருத்துவ வசதிகளுமின்றி குகைக்குள் பிரசவித்திருந்த தாயும் சேயும், மீட்கப்பட்ட உடனேயே பொலிஸார் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சிறுமியின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, அவரது தொடர் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்க விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய பிரதான சந்தேகநபரும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் 36 வயதுடைய உறவினரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இதேவேளை, வேறு சில பிரமுகர்களும் இப் பெண்ணுக்கு உதவியளிக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக பெண்ணின் கல்விக்கு ஊக்கமளித்து நிதியதவி வழங்கவுள்ளதாக பலர் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளனர்.