யாழில் குடிபோதையில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த இளைஞருக்கு பாடம் புகட்டிய வீட்டினர்!
யாழ்பாணத்தில் மதுபோதையில் வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வீட்டாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று 300 வீட்டுத்திட்டம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மது போதையில் அட்டகாசம்
சம்பவத்தில் அதேபிரதேசத்தை 22 வயதுடையரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
இளைஞன் மது போதையில் வீட்டுக்குள் நுழைந்து தர்க்கத்தில் ஈடுபட்டதனால் வீட்டில் இருந்தவர் கத்தியால் வெட்டியுள்ளார்.
இந்நிலையில், படுகாயமடைந்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் இச் சம்பவம் குறித்து சாவச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.