பட்டப்பகலில் வீடுபுகுந்து நகை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
கோப்பையில் நேற்று பகல் நேரத்திலே இடம்பெற்ற 10 பவுண் நகை திருட்டில் தொடர்புடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதுடைய இந்த இளைஞன் இணுவிலை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்றில் இருந்த சுமார் 10 பவுண் நகை திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டின் உரிமையாளர் குளியலறையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டு நகைகள் விற்பனை செய்யும் நோக்கத்துடன் சுற்றி வந்த இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனையடுத்து அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகளும் நேற்று வீடொன்றில் திருடுபோன நகையும் ஒன்றென கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் கோப்பாய் காவல் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.