நுவரெலியாவில் பெருந்தொகை பணத்துடன் பிடிபட்ட இளம் போதை வியாபாரி ; தீவிரமாகும் விசாரணை
நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதலின் போது நுவரெலியா உடப்புசல்லாவ அனிக் பகுதியைச் சேர்ந்த 31 வயது போதைப் பொருள் வியாபாரி என கூறும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (11) வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஐந்து நாட்கள் தடுப்புக்காவலுக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 2270 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 33.8 மில்லிகிராம் கஞ்சாவும் போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக அவர்கள் ஈட்டிய ஒரு இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெறுகின்றன