இலங்கையில் இளம் ஜோடிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி! உயிரிழந்த பெண் தொடர்பான தகவல்
பதுளை - கொஸ்லாந்தை பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளான இளம் ஜோடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த இளம் கோடி இரவுப் பொழுதை கழிப்பதற்காக உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தபோது காட்டு யானை தாக்கியதில், யுவதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 23 வயதான கவிசா இயூஜின் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
மேலும் யானை தாக்குதலில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, 23 வயதான தனுஷ்க மற்றும் இயூஜின் இலங்கையில் பல இடங்களுக்கு சென்று அந்தக் காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருதால் பிரபலயம் அடைந்துள்ளனர்.
அவ்வாறு காணொளி ஒன்றை பதிவு செய்யும் நோக்கில் நேற்றைய தினம் (11-05-2023) மாலை 6.30 மணியளவில் உடதியலுமை பகுதிக்கு இந்த இளம் ஜோடி சென்றிருந்தது.
இருப்பினும், இந்த பயணம் இயூஜினின் இறுதிப் பயணமாகவே அமைந்தது. காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடதியலுமை கிராம மக்கள் இன்றைய தினம் (12-05-2023) காலை சென்று பார்த்த போது தனுஷ்க மதுஷான் காயமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
மாத்தறை - கெக்கனதுர பகுதியை சேர்ந்த கவிசா இயூஜின் மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.