கத்தி முன்னையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற இளைஞன் கைது
நல்லூர் கைலாசப்பிள்ளையார் கோவிலடியில் உள்ள சொக்கன் கடாயில் கத்தி முனையில் கொள்ளை சமபவத்தில் ஈடுப்பட முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சொக்கன் கடைக்குள் புகுந்த குறித்த இளைஞன் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து , பணம் கேட்டுள்ளார். அதன் போது , அங்கிருந்தவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து கத்தியையும் பறிமுதல் செய்த பின்னர் , இளைஞனை தடுத்து வைத்திருந்து பொலிஸாருக்கு அறிவித்து , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
முன்னதாக குறித்த இளைஞன் புத்தக கடை ஒன்றிலும் கத்தியினை காட்டி பெண் ஒருவரை மிரட்டியுள்ளார், அந்த சமயத்தில் அச்சமுற்ற பெண் கூச்சலிட குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பியுள்ளான்.
குறித்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காட்சி அளித்ததாகவும் அழுக்கான உடை அணிந்திருந்தாகவும் பொது மக்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.