வீட்டிற்குள் சென்றதும் நல்ல வைப்ரேஷன் கிடைக்க வேண்டுமா அப்போ இதை செய்யுங்கள்
வீட்டிற்குள் சென்றதும் நல்ல ஒரு வைப்ரேஷன் கிடைக்க வேண்டும்.இதனால் நம்முடைய சிந்தனைகள் தெளிவு பெறுகிறது.
வீட்டில் நல்ல வைப்ரேஷன் உண்டாகவும், பொருளாதாரம் மடமடவென உயரவும் ஒரு டம்ளர் தண்ணீர் இருந்தால் போதும்.
அதை நாம் என்ன செய்ய வேண்டும்?
பிரபஞ்சம்
இந்த பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை, எதிர்மறை ஆற்றல்கள் கலந்து கிடக்கின்றன.நல்லது என்று ஒன்று இருந்தால், கெட்டது ஒன்று இருக்கிறது.
முழுமையாக எவரும் நல்லவர் கிடையாது, முழுமையாக எவரும் கெட்டவரும் கிடையாது. நமக்குள்ளேயே இரு வேறு முகங்கள் காணப்படுகின்றன.
அப்படித்தான் நம் வீட்டில் நுழையும் பொழுதும் நல்ல அதிர்வலைகள், கெட்ட அதிர்வலைகள் இருக்கிறது. இதில் எதை நாம் உணர்கிறோமோ அதே போல நம் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது சூட்சமமான உண்மையாகும்.
சிலருடைய வீட்டிற்குள் சென்றாலே தெய்வீக மனம் கமலும் வண்ணம் வீட்டை வைத்திருப்பார்கள். அந்த வீடுகளில் எல்லாம் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அது வந்த வழியே சென்று விடும் என்று கூறப்படுகிறது.
நல்ல வைப்ரேஷன்
நல்ல வைப்ரேஷன்கள் அதிகரிக்க வீட்டின் வடகிழக்கு மூலையில் நறுமணம் மிக்கதாக, தெய்வீக சக்தியை அதிகரிக்க கூடியதாக ஒரு பொருளை வைக்க வேண்டும்.
வைக்க வேண்டியவை
ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு சிட்டிகை அளவிற்கு பச்சை கற்பூரத்தை நொறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சைக் கற்பூரம் பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு அற்புதமான பொருளாக ஆன்மீகம் குறிப்பிடுகிறது.
அத்தோடு இது சாதாரண கற்பூரம் போல் அல்லாமல் நல்ல ஒரு வாசத்தை கொடுக்கக் கூடியது தெய்வங்களை தன் வசம் ஈர்க்கக் கூடியது என்று கூறப்படுகிறது.
இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு கல் உப்பு போட்டு எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு போய் டம்ளரை வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள்.
மாற்ற வேண்டிய நாள்
வாரம் ஒரு முறை வியாழன் கிழமையில் இந்த கண்ணாடி டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை மண்ணில் ஊற்றிவிட்டு புதிதாக தண்ணீர் ஊற்றி இதே போல செய்து வைக்க வேண்டும்.
இதன் நறுமணம் வீடு முழுவதும் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ண கூடிய ஒரு அற்புதமான விடயமாக இருக்கிறது.
குபேரனுக்கு உகந்த மூலை
வடகிழக்கு மூலை குபேரனுக்கு உகந்த மூலை ஆகும்.அத்தோடு செல்வத்தை அதிகரிக்க செய்யக்கூடிய மூலையும் இதுதான் என்று கூறப்படுகிறது.
இந்த மூலையில் இப்படி செய்து வைப்பதால் நாம் வீட்டிற்குள் நுழைந்ததும் நல்ல வைப்ரேஷன் கிடைக்கிறது. இதனால் நம்முடைய சிந்தனைகள் ஒருமுகபடுகிறது.
இப்படி செய்வதால் பொருளாதாரமும் படிப்படியாக உயரத்துவங்கும்.எப்பேர்பட்ட தீய சக்திகள் வீட்டிலிருந்தாலும் அது ஓடிவிடும்.