உங்கள் வயிற்றில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா! மக்களே அவதானம்
உலகளவில் பெரும்பாலான மக்களின் இறப்பிற்கு முக்கிய காரணியாக அமைவது புற்றுநோய் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ஆண்டுக்கு ஆறில் ஒரு நபருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
புற்றுநோய்கள்
இதில் மார்பகம், நுரையீரல், பெருங்குடல், மலக்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் மிகவும் பொதுவானதாக கருதப்படுகிறது.
வயிற்றுப் புற்றுநோய்
பலருக்கும் வயிற்றுப் புற்றுநோய் குறித்து பெரிதளவில் விழிப்புணர்வு இல்லை, வயிற்றுப் புற்றுநோய் பொதுவாக இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது.
வயிற்றில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியினால் வயிற்று புற்றுநோய் உருவாகிறது. பொதுவாக வயிறு உணவை செரிக்க செய்கிறது அப்படி இருக்கையில் வயிற்று புற்றுநோய் ஏற்பட்டால் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும்.
பெரும்பாலும் வயிற்றுப் புற்றுநோயானது இரைப்பை உணவுக்குழாய் சந்திப்பில் தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பொதுவாக நமக்கு எந்த நோய் வந்தாலும் அதற்கு முன்னர் கண்டிப்பாக சில அறிகுறிகள் தென்படும்.
இதுபோன்ற அறிகுறிகளை நாம் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் நோயின் நிலையை நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
வயிற்று புற்றுநோய் ஏற்படும்போது நமது உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது, இந்த அறிகுறிகளை நாம் சரியாக உற்றுநோக்கி நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது நம்மை பெரியளவில் பாதிப்பில் இருந்து காப்பாற்ற உதவும்.
வயிற்று புற்றுநோயின் வகைகள்
குடல் புற்றுநோய், சோலங்கியோகார்சினோமா, உணவுக்குழாய் புற்றுநோய், ஃபைப்ரோலமெல்லர், ஹெபடோ செல்லுலர் கார்சினோமா, இரைப்பை அடினோகார்சினோமா மற்றும் வயிற்றின் ப்ராக்ஸிமல் பாலிபோசிஸ் (GAPPS), பரம்பரை பரவலான இரைப்பை புற்றுநோய் (HDGC), SDH-குறைபாடுள்ள இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டி (GIST).
வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள்
சரியாக விழுங்க முடியாது, நெஞ்செரிச்சல், அஜீரணம், குமட்டல், வாந்தி, திடீர் எடை இழப்பு, எப்போதும் சோர்வாக உணர்வது, கருப்பு மலம், குறைந்த உணவில் வயிறு நிரம்பிய உணர்வு, வீக்கம், வயிற்று வலி.