அடிக்கடி சிறுதானியங்கள் சாப்பிடுபவரா நீங்கள்; அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!
அக்காலத்தில் நம் முன்னோர்கள் ராகி, வரகு, திணை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற அளவில் சிறியதாக இருக்கும் தானியங்களாகும்.
அரிசி, கோதுமையை விட, சிறுதானியங்களையே அதிகமாக உட்கொண்டு வந்தார்கள்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறுதானியம்
காலப்போக்கில் சிறுதானியங்களை உண்ணும் பழக்கம் மக்களிடையே குறைந்துவிட்டது.
எனினும் தற்போது மீண்டும் மக்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களின் நன்மைகளை அறிந்து கொண்டு, தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள்.
சிறுதானியங்களை தினசரி உணவில் சேர்க்கும் முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
சோளம்
ஆண்டு முழுவதும் உட்கொள்ள ஏற்ற ஒருசிறு தானியம் தான் சோளம். இதில் புரோட்டீன், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. சோளம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன.
கோதுமை ரொட்டிக்கு இது ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். க்ளுட்டன் இல்லாத இந்த சிறுதானியம் உடல் எடையைக் குறைக்க ஊக்குவிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் குடல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கம்பு
கம்பு குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது. இது கோடைக்காலத்தில் உட்கொள்ள ஏற்றது. அதுவும் கம்பை ஊற வைத்து அரைத்து, அதைக் காய்ச்சி தயிர் சேர்த்து கோடைக்காலத்தில் குடித்தால், உடல் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
கம்பு உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரிகிறது, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது மற்றும் இது சருமம், தலைமுடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சிறுதானியங்களை சாப்பிடும் முன் கவனத்தில் கொள்ளவேண்டியது
உணவில் சிறுதானிங்களை சேர்க்க நினைத்தால், உடனே அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால், அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
புதிதாக சிறுதானியங்களை தங்களின் உணவில் சேர்ப்பவர்கள், முதலில் அந்த தானியங்களை நீரில் ஊற வைத்து, பின்னரே சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் சிறுதானியங்களால் ஏற்படும் செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
சிறுதானியங்களை எப்போதும் ஊற வைத்து தான் உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதில் உள்ள பைட்டிக் அமிலம் பிற சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதைக் குறைத்து, ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும்.
ஹைப்போதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க
ஹைப்போதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சிறுதானியங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில அதில் கோய்ட்ரோஜன்கள் உள்ளன.
இந்த கோய்ட்ரோஜன்கள் அயோடினை உறிஞ்சுவதில் இடையூற ஏற்படுத்தும். சிறுதானியங்களை சமைக்கும் போது இந்த கோய்ட்ரோஜன்கள் குறையலாம். இருப்பினும், முழுமையாக நீக்கப்படாது.
மேலும் சோளம், கம்பு மற்றும் ராகி போன்ற சிறுதானியங்கள் கோதுமைக்கு ஒரு சிறந்த மாற்று உணவுப் பொருட்களாகும். உங்களுக்கு கோதுமை உணவுகள் ஆகாதெனில், சோளம், கம்பு, ராகி ரொட்டியை சாப்பிடலாம்.
அதுவும் தினமும் ஒரே மாதிரி சாப்பிடாமல் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ரொட்டியை தயாரித்து சாப்பிடுங்கள்.