அரசியல் வேட்டைக்கு தாம் உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறும் மஹிந்தவின் மகன்
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தாம் பாடசாலை மாணவனாக இருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பில், அரசியல் வேட்டையில்; ஈடுபடுவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
கதிர்காமத்தில் உள்ள ஒரு நிலத்தின் உரிமை குறித்து யோசித்தவிடம் நேற்று காலை பல மணி நேரம் குற்றப்புலனாய்வாளர்களின் விசாரணை நடத்தப்பட்டது,
எனினும் இதன்போது எந்த ஒரு தகவலும் வெளிப்படவில்லை என்று யோசித்த தெரிவித்துள்ளார்
2006 மற்றும் 2007 க்கு இடையில் தாம் பாடசாலையில்; படிக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்தாக தெரிவிக்கப்பட்;டுள்ளது
எனினும் 2023 ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட நிலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு மதத்தலத்துக்கு சில உதவிகளை தாம் வழங்கியதாக யோசித்த தெரிவித்துள்ளார்
இதன்போதுகூட, தம்மை தொடர்புப்படுத்தி பேசப்படும் சம்பந்தப்பட்ட நிலம் இருப்பதாக கூட தமக்கு தெரியாது என்றும் யோசித்த குறிப்பிட்;டுள்ளார்
2017 ஆம் ஆண்டில் கூட, நல்லாட்சி அரசாங்கம் இந்த விடயத்தை விசாரித்தது,
ஆனால் அப்போது தமது பெயர் அதில் தொடர்புப்படுத்தப்படவில்லை
எனினும் இப்போது இந்த அரசாங்கம் அரசியல் ஆதாயங்களுக்காக தம்மை ஒரு பொய்யான நில சம்பவத்தில் சிக்க வைக்க முயற்சிப்பதாக யோசித்த தெரிவித்துள்ளார் ;.