இலங்கைக்கு வரும் சீன உளவு கப்பல் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி
சீனாவிலிருந்து இலங்கைக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் ஆராய்ச்சிக்காக வரவுள்ள சியான் 6 ஆராய்ச்சிக்கப்பலிற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதுவரையில் எவ்வித தீர்மானமும் வழங்கப்படவில்லை.
இந்தியாவின் போட்டி நாடான சீனா இக் கப்பலை இலங்கைக் கடற்பகுதிக்குள் அனுப்புவது குறித்து சந்தேகம் நிலவுவதால் இந்நிலைமை ஏற்றபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன கப்பல் நாராவுடன் இணைந்து சியான் 6 கப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அதிகாரிகள் இதற்கான அனுமதியை கோரியுள்ளபோதிலும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை.
இரண்டு நாடுகளிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியை கையாளும் முறைப் பற்றி வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
கூட்டு ஆராய்ச்சியை முன்னெடுப்பது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நாரா சீன கப்பலை இந்தியாவிற்குள் அனுமதிக்கவேண்டும் என வற்புறுத்திவருகின்றது.
நாங்கள் தனியாக கடல் ஆராய்ச்சியில் ஈடுபடமுடியாது ஏனைய நாடுகளுடன் இணைந்தே கடல் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என நாராவின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கடும் கரிசனையை வெளியிட்டுள்ள போதிலும்சீன கப்பலை அனுப்புவதில் பிடிவாதமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.