பணத்திற்காக மனைவியை விபச்சாரியாக்கிய கணவன்!
கொழும்பில் மனைவியை விபச்சாரியாக காண்பித்து, பல்வேறு நபர்களை ஏமாற்றி பாழடைந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று கொள்ளையில் ஈடுபட்டுவந்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு துணை புரிந்த மனைவி மற்றும் ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு முறைப்பாடு
தங்கச்சங்கிலியொன்றும், தொலைபேசியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவுவேளையில் எகொட - உயன பிரதான வீதிக்கு அருகில் மனைவியை நிறுத்தி , அவரை நாடும் நபர்களுடன் மனைவி, பாழடைந்த இடத்துக்கு சென்ற பின்னர், அங்கு வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் கணவன் ,மனைவி மற்றும் நண்பன் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.