இறைவனை வழிபடும் போது இந்த நைவேத்தியத்தை வைத்து வழிபடுங்கள்
நாம் தினமும் இறைவனை வேண்டுகிறோம் அவ்வாறு வேண்டும்பொழுது ஒரு சிறு பொருளை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்வதன் மூலம் நம்முடைய குடும்பம் மேன்மை அடையும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக மாதுளை செடியை வீட்டில் வைப்பதன் மூலமாக மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று கூறப்டுகிறது.
அச்செடியில் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. அதன் மூலம் நம் குடும்பத்தில் எந்தவித குறைபாடும் இன்றி செல்வ செழிப்புடன் வாழலாம் என்று கூறுவார்கள்.
நைவேத்தியம்
தினமும் இறைவனுக்கு காலையில் விளக்கேற்றும் போது ஒரு மாதுளை பழத்தை எடுத்து அதை இரண்டாக பிளந்து அதில் சுத்தமான தேனை ஊற்ற வேண்டும். பிறகு அதை நெய்வேத்தியமாக இறைவனுக்கு படைத்து வணங்கி வரவேண்டும்.
அவ்வாறு வணங்கிய பிறகு அந்த பழத்தை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு தினமும் நாம் செய்து வரும் போது நம்முடைய குடும்பம் மேன்மை அடையும் என்று கூறப்படுகிறது.
நன்மைகள்
பிள்ளைகள் நன்றாக படிப்பது, காரிய தடை விலகுவது, செல்வ செழிப்பு ஏற்படுவது, குடும்பத்தில் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்வது போன்ற அனைத்து விடயங்களும் நடைபெறும்.
இந்த பழத்தை தினமும் இறைவனுக்கு நைய்வேத்தியமாக வைத்து வணங்கி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்க வேண்டும்.