குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட இவரை வழிபடுங்க
படிக்கின்ற அனைத்து குழந்தைகளும் முதல் மதிப்பெண் பெறுவது என்பது நடக்காத ஒரு காரியம். ஆனால் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் அவர்களால் இயன்ற முயற்சிகளை செய்வதற்கும் அவர்களுக்கென்று ஒரு உந்து சக்தி என்பது வேண்டும்.
இந்த உந்து சக்தியை தருவதற்கும் அவர்கள் தங்களுடைய படிப்பில் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே செல்வதற்கும் விநாயகப் பெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
விநாயகர் வழிபாடு
கல்வியில் முன்னேற்றம் ஏற்பட அனைத்து தெய்வங்களுக்கும் முதன்மையானவராக திகழக்கூடியவர்தான் விநாயகப் பெருமான். அதனால்தான் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு செல்வார்கள். மேலும் அவரை வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து விதமான செல்வங்களும் நமக்கு கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை ஞாயிற்றுக்கிழமை தோறும் எந்த முறையில் வழிபட குழந்தைகளின் கல்வி அறிவு மேலோங்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த வழிபாட்டை குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் செய்ய வேண்டும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியில் இருந்து 12 மணிக்குள் செய்து விட வேண்டும்.
அதனால் காலை நேரத்தில் அசைவம் சாப்பிடாமல் இந்த வழிபாட்டை செய்த பிறகு இயலாத பட்சத்தில் அசைவத்தை சாப்பிட்டு கொள்ளுங்கள். முடிந்த அளவு அசைவத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 9 ஞாயிற்றுக்கிழமைகள் செய்ய வேண்டும்.
இதற்கு நமக்கு விநாயகப் பெருமானுக்கு உகந்த செம்பருத்திப்பூ வேண்டும். 27 செம்பருத்தி பூவை பறித்து அதை மாலையாக கட்டி வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமாளுக்கு அந்த நேரத்தில் சாற்றி இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் சிறப்பாக படிக்க வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை 27 என்ற எண்ணிக்கையில் செம்பருத்தி பூக்கள் கிடைக்கவில்லை என்னும் பட்சத்திலோ செம்பருத்தி பூவிற்கு இணையான மற்றொன்றாக திகழ்வதுதான் ஏலக்காய். நல்ல ஏலக்காயாக பார்த்து 27 எண்ணிக்கையில் மாலையாக கட்டி விநாயகப் பெருமானுக்கு சாற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும் குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.