தொப்பையை நினைத்து கவலையா? இந்த 5 விஷயங்களை செஞ்சா போதும்!
முன்னர் நடுத்தர வயதினருக்கும் வயதானவர்களுக்கும் மட்டும் இருந்த இந்த பிரச்சனை இப்போது சிறுவயதினருக்கும் தொப்பை விழுதல் பிரச்சனை ஏற்படுகின்றது. நமது மோசமான வாழ்க்கை முறையே ,அனைத்து வயதினருக்கும் தொப்பை விழ காரணம் என சொல்லப்படுகின்றது.
அதாவது ஃபாஸ்ட் புட் உண்வுகள் , போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. எனவே உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து சில நாட்களிலேயே உங்கள் எடையைக் கட்டுப்படுத்தலாம்.
காலையில் எழுந்தவுடன் சில குறிப்பிட்ட வேலைகளை செய்தால், அது உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதோடு, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
1. தண்ணீர் காலையில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். முடிந்தால் ஒரு கிளாஸ் வெந்நீரை குடிக்கவும். இது உங்கள் கலோரிகளையும் கொழுப்பையும் வேகமாக எரிக்கும். இது தவிர, உங்கள் உடலும் நீரேற்றமாக இருக்கும். மிக விரைவில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து, உடல் வடிவம் பெறும்.

2. காலை உணவு காலை உணவுக்கு முட்டை மற்றும் பால் போன்ற புரதம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது என்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனுடன், காலை உணவின் அளவை குறைக்கக்கூடாது. காலை சிற்றுண்டுயை வயிறு நிரம்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. சூரிய ஒளி உடலில் வைட்டமின் டி அளவும் எடையை பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதிகரிக்கும் எடையைக் குறைக்க வைட்டமின் டி உதவிகரமாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே, காலை சூரியன் உடலில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

4. எடை உடல் எடையை குறைக்க, உங்கள் எடையை அடிக்கடி பரிசோதிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் தொடர்ந்து உந்துதல் பெறுவீர்கள்.

5. தியானம் உடல் எடையை குறைக்க, மிகவும் கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதை தவிர்த்து, தினமும் காலையில் தியானம் செய்வதை பழக்கப்படுத்துங்கள்.

இதன் மூலம், படிப்படியாக ஆனால் கணிசமான வித்தியாசம் உங்கள் எடையில் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் எடையில் மட்டுமல்ல, இது உங்கள் சருமம் மற்றும் மன ஆரோக்கியத்திலும் சாதகமான விளைவை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது.