உலகின் மிக நீண்ட நடைப் பந்தயம்: எங்கு தெரியுமா?
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள குவீன்ஸ் பகுதியில் உலகின் மிக நீண்ட நடைப் பந்தயம் இடம்பெற்று வருகின்றன. இந்த நடைப் பந்தயத்தில் கலந்துகொள்பவர்கள் ஒரு புளோக்கைச் சுற்றி 4989 கிலோமீட்டர் தூரம் நடந்து வர வேண்டும்.
இதேவேளை புளோக்கைச் சுற்றி 5,649 முறை நடந்தால், இந்த பந்தயமானது முடிவுறும். மேலும் அதைச் செய்து முடிக்க சுமார் 2 மாதங்கள் எடுக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த நடைப் பந்தயத்தில் கலந்துகொள்வோர் நாள்தோறும் 5 மணித்தியாத்திற்கும் குறைவாகவே தூங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை ஆயிரக்கணக்கானோர் இமயமலையின் உச்சத்தை எட்டியுள்ளனர். ஆனால் புளோக்கைச் சுற்றிய, உலகின் மிக நீண்ட பந்தயத்தில் கலந்துகொண்டு 49 பேர் மட்டுமே முடிந்துள்ளனர்.
காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை, பந்தயவீரர்கள் புளோக்கைச் சுற்றி ஓடுவர், நடப்பர்.
புளோக்கைச் சுற்றிச் சுற்றிச் செல்வதால் ஏற்படக்கூடிய சலிப்பே பந்தயத்தின் ஆகப் பெரிய சவால் என்கின்றனர் பந்தயத்தில் கலந்துகொண்டவர்களின் பலர்.