மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்!
எதிர்காலத்தில் நம்மால் கட்டுப்படுத்த முடியாத மற்றொரு வைரஸ் வெளிப்படலாம் என்பதை உயிரியல் ரீதியான நிலைப்பாடுகள் உறுதி செய்து இருப்பதாக என உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) எச்சரித்துள்ளார்.
நேற்று (30) சனிக்கிழமை இடம்பெற்ற ஜி20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மற்றொரு தொற்றுநோய்க்கு தயாராகும் வகையில் தற்போதைய தொற்றிலிருந்து சர்வதேச சமூகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் தொற்று நோய் நெருக்கடிகளை சிறப்பாகக் கண்டறிந்து கையாளக்கூடிய வகையில் வலுவான, அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் போதிய நிதி ஆதாரத்தைக் கொண்ட உலக சுகாதார அமைப்பு தேவை.
இது தொற்றுநோய்களுக்கு எதிரான விரைவான எதிர் நடவடிக்கைகளையும் சிறந்த நிர்வாகத்தையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறை எனவும் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.