உலக கிண்ண பயிற்சிப் போட்டி: இலங்கையை வென்ற பங்களாதேஷ்!
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியினை முன்னிட்டு இன்றைய தினம் இடம்பெற்ற பயிற்சி போட்டியில் இலங்கையை அணியை 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வென்றுள்ளது.
இந்தியாவில் உள்ள குவாட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இதன்படி, இலங்கை அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பெத்தும் நிஸ்ஸங்க 68 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
364 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக தன்சித் ஹசன் 84 ஓட்டங்களையும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.