நோர்வேயில் சிறந்த விருதை வென்ற இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர்!
யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன் பிரபாலினிக்கு சிறந்த இசை காணொளிக்கான விருதை வழங்கியிருக்கிறது.
“ஆத்தங்கரை ஓரத்தில ” கிராமத்து குத்து பாட்டு” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த பாடல் இது.
பிரபாலினி, ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Paramesh மற்றும் சங்கீத பூஷனம் Sivamalini Paramesh தம்பதிகளின் மூத்த மகளாவார்.
இலங்கையின் 1968களில் முதல் தமிழிசைத்தட்டை தனது காதலிக்காக “உனக்குத்தெரியுமா நான் உன்னை நினைப்பது” என்று எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்ட பெருமைக்குரிய எமது பெருமைக்குரிய மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் மகள் தான் இந்த பிரபாலினி பிரபாகரன்.
அவரது அம்மா அப்பா வழியில் இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர்.
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வெளியிட காதலர் தினத்தில் களத்தில் குதித்த “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடல் மாபெரும் வெற்றியை கிடைக்க பெற்றுள்ளது.
பிரபாலினி பிரபாகரன் வெளியிட்ட Queen cobra என்ற ஆடியோ ஆல்பம் தொகுப்பில் இருந்து வெளியான வீடியோ ஆல்பம் இது. முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்டது.
ஒரு ஈழத்தமிழ் மகள் எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து, நடித்த பாடலும் இதுவாக மட்டுமே இருக்கிறது என்பதும் இந்தப்பாடலின் அடுத்த பெரும் சாதனை தான்.
இந்தப்பாடலை முழுமையாக இலங்கையிலேயே படமாகடகியுள்ளனமையும் குறிப்பிடத்தக்கதாகும்.