13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி

Gotabaya Rajapaksa Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Economic Crisis
By Shankar Jul 12, 2022 07:02 PM GMT
Shankar

Shankar

Report

பதில் ஜனாதிபதிச் சர்ச்கைக்கு எப்படி முடிவு வரப்போகின்றது எனப் பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் நேரடியாகச் சொல்லாதுவிட்டாலும், மறைந்திருக்கும் பொருள் விளகங்களின் பிரகாரம், கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) குறைந்தது மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.

13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி | Won T Gotabaya Resign On The 13Th Medical Leave

ஆகவே 13 ஆம் திகதி புதன்கிழமை பதவி விலகல் கடிதத்துக்குப் பதிலாகத் தனது மருத்துவ விடுமுறை பற்றிய கடிதத்தை கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்குச் (Mahinda Yapa Abewardena) சமர்ப்பித்தாலும் வியப்பில்லை.

அவ்வாறு மருத்துவ விடுமுறை அறிவித்தால், பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) யாப்பின் பிரகாரம் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்க நேரிடும்.

(அல்லது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தாலும் அன்றை தினமே ரணில் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்க முடியும்) சத்தியப்பிரமானத்தை உயர் நீதிமன்றப் பிரதம நீதியரசர் செய்துவைக்கலாம்.

13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி | Won T Gotabaya Resign On The 13Th Medical Leave

அதற்கு நாடாளுமன்றம் கூட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தைக்கூட்டி நியமனத்தை அங்கீகரிக்க வேண்டும்.

இலங்கை அரசியல் யாப்பில், பொருள்கோடல் என்பதை வாதத்திறன் உள்ள சட்டத்தரணி ஒருவரினால் தமக்குரியதாக மாற்றியமைக்க முடியும்.

எனவே கோட்டாபய ராஜபக்ஷ மருத்து விடுமுறை எடுத்தது தவறு என்று எவரேனும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தால், ரணில் விக்கிரமசிங்கவுக்காக வாதாடும் சட்டத்தரணி பதில் ஜனாதிபதிக்குரிய நியமனத்தை நியாயப்படுத்தி வாதிடுவார்.

13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி | Won T Gotabaya Resign On The 13Th Medical Leave

அதேநேரம் போராட்டக்குழு ஜனாதிபதி மாளிகைய, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதால், கோட்டாபயவும் ரணிலும் பதவி இழந்துள்ளதாக சஜித் தரப்புச் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வியாக்கியணம் செய்யக்கூடும்.

ஆனால் போராட்டக்குழு அவ்வாறு கைப்பற்றி வைத்திருக்கின்றமை சட்டத்திற்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.

ஆகவே உயர் நீதிமன்றத் தீர்ப்பும் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிப்பது யாப்புக்கு அமைவானது என்றே அறிவிக்கப்படலாம்.

13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி | Won T Gotabaya Resign On The 13Th Medical Leave

சட்டச் சிக்கலை எதிர்கொண்டு தமது போராட்டத்தை நியாயப்படுத்தக்கூடிய அளவுக்குப் போராட்டக் குழுவிடம் நிர்வாகத்திறன் இருப்பதாகத் தெரியவில்லை. போராட்டம் வெற்றி என்பது உண்மையே.

ஆனால் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டிய போராட்டக்குழு, பிரதான அரசியல் கட்சிகளிடம் பொறுப்பைக் கையளித்துவிட்டு ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருக்கிறது.

வெற்றிபெற்ற அடுத்த கணமே. நாடாளுமன்றத்தைக் கூட்டு என்று போராட்டக்குழு அழுத்தியிருந்தால், அல்லது போராட்டக் குழு சார்பாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தால், நிச்சியம் சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியிருக்கும்.

ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் பிரதமருக்காக தேசிய துக்க தினத்தை ரணில் அறிவித்திருப்பதால் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.

13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி | Won T Gotabaya Resign On The 13Th Medical Leave

அப்படிக் கூடினாலும், பதில் ஜனாதிபதி, புதிய பிரதமர் யார் என்ற விவகாரங்களைப் பேசுவது துக்க தினத்தை அவமதிப்பதாக அமையும். அதனாலேயே மிக நுட்பமாகச் சிந்தித்து ரணில் விக்கிரமசிங்க தேசிய துக்க தினமாக அறிவித்திருக்கிறார் போலும். அடுத்த நாள் 13 ஆம் திகதி போயா விடுமுறை.

ஆகவே அந்த நாளில் கோட்டாபய தனது மருத்துவ விடுமுறையை அறிவித்தால், போயா விடுமுறையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.

ஆனால் பதில் ஜனாதிபதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்ய முடியும். உடனடியாகப் பதவி பிரமாணம் செய்தமைக்கான வலுவான காரணத்தை ரணில் முன்வைக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளும் உண்டு.

13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி | Won T Gotabaya Resign On The 13Th Medical Leave 

ஆகவே இங்கே என்ன நடக்கிறது என்றால், ரணில் பதில் ஜனாதிபதியாக வருவதைத் தடுக்க சஜித், அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கு எதிராக முடிந்தவரை தனது நுட்பமான இராஜதந்திர அணுகுமுறையை ரணில் கையாளுகின்றார்.

ரணிலுக்குச் சர்வதேச ஆதரவு உண்டு. ஆனால் வாக்கெடுப்பு நடத்திப் பதில் ஜனாதிபதியாக வருமளவுக்கு ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை.

இருந்தாலும் மேற்படி கூறப்பட்ட வழிமுறைகள் மூலம் பதில் ஜனாதிபதியாக ரணில் வருவாரானால், பல சிங்கள அரசியல்வாதிகள் ஒதுங்க நேரிடும்.

13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி | Won T Gotabaya Resign On The 13Th Medical Leave

ராஜபக்ச குடும்பமும் காப்பாற்றப்படும். இதனைத் தமிழ்த்தேசிய நோக்கில் அவதானித்தால் - ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியானால், சா்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர் விவகாரம் முற்றாகவே நீக்கம் செய்யப்படும்.

ரணில் விக்கிரமசிங்கவை வெட்டி ஓடக்கூடிய ஆற்றல் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கின்றனர். ஆனால் தேர்தல் அரசியல் போதுமென்ற மன நிலையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.

இந்தப் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி பிரதமராகப் பதவி வகித்த ஒன்றரை மாதத்தில் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை ரணில் முற்றாக மாற்றிவிட்டார் என்ற தகவல்கூட தமிழ்த்தேசியத் தலைவர்கள் பலருக்குத் தெரியாது.

13ஆம் திகதி கோட்டாபய பதவி விலகப்போவதில்லையா? வெளிவரும் பின்னணி | Won T Gotabaya Resign On The 13Th Medical Leave

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு மக்கள் என்று நோக்கினால்--- தற்போதைய பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஆற்றல் உள்ளவர் ரணில் மாத்திரமே. இங்கே பிரச்சினை என்னவென்றால், தமிழ்த்தேசிய ஆய்வாளர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்க தமிழ் இன விரோதி என்று புலம்புகின்றனர்.

ஆனால் ரணில் சிங்கள பௌத்த மக்களுக்குரிய கடமையை, சிங்கள மக்களின் பல குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் புத்தி வகுத்துச் செய்கிறார்.

ஆகவே கேள்வி என்னவென்றால், தமிழ்த்தேசியக் கட்சிகளில் உள்ள சட்டப் புலமையாளர்கள் சிலருக்கு ரணில் விக்கிரமசிங்க போன்று சர்வதேசத்தைக் கையாளக்கூடிய ஆற்றல் ஏன் இல்லாமல் போனது? வேறு சில சட்டப் புலமையாளா்கள் 2015 இல் ரணில் அமைத்த அரசாங்கத்தோடு படுத்திருந்து தமிழ்த் தேசியத்திற்காக உழைத்தாகக் காண்பித்தார்கள்.

ரணில் பதில் ஜனாதிபதியானால், 2015 இல் அமைத்த அரசாங்கத்தைப் போலல்லாது, தனித்துச் செயற்பட்டு முதல் வேலைத்திட்டமாக ஈழத்தமிழர் விவகாரத்தை மிக நுட்பமாகக் கையாண்டு, சா்வதேச சமூகத்தை முற்று முழுதாகத் திசை திருப்புவார்.

பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணம் முப்பது ஆண்டுகால போருமல்ல, 2009 இன் பின்னரான வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மயமாக்கலுமல்ல என்பதை நிறுவுவார்.

சில தமிழ்ப் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் சிலவும் ரணிலோடு ஒத்தூதி இலங்கை ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்கி விடுவர் என்பது கண்கூடு என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் என்பவர் குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முல்லைத்தீவு

03 Oct, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Montargis, France

05 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், நெடுந்தீவு, Norbury, United Kingdom

03 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US