பட்டப்பகலில் மயானத்தில் பலி கொடுத்த பெண்கள் ; கல்லறையில் கிடைத்த பொருட்களால் பீதியில் உறையும் மக்கள்
பொலன்னறுவை பக்கமுனா பகுதியில் உள்ள ஒரு மயானத்தில், பலி கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்கள் இருவரும் மனித உருவங்களை ஒத்த களிமண் சிலைகளைக் கொண்டு கல்லறைகளில் விளக்குகள் ஏற்றி வந்தமையால் கிராம மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரனைகளின்படி இந்த இரண்டு பெண்களும் கல்லறைகளைச் சேதப்படுத்தி, குழிகளைத் தோண்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பலி சடங்கிற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் பொலன்னறுவை, ஹிங்குரகொடவைச் சேர்ந்த 49 வயதுப் பெண் என்றும், மற்றொருவர் பக்கமுனா, சருபிமவைச் சேர்ந்த 38 வயதுப் பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லறைக்கல்லைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த இரண்டு பெண்களும் இதற்கு முன்னரும் இதே போன்ற செயல்களைச் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக அவர்கள் கிராமத்தில் வசிக்கவே அஞ்சுவதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.