கொழும்பில் சஜித்தின் மனைவிக்காக கூடிய பெண்கள்: திடீரென ஏற்பட்ட குழப்பம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் Sajith Premadasa மனைவி ஜலனி பிரேமதாசவுக்கு ஆதரவாக கொழும்பில் திரண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தாம் ஏன் ஒன்று கூடியுள்ளோம் என்பது தொடர்பில் தமக்கு தெரியாது என அறிவித்துள்ளனர்.
ஜலனி பிரேமதாசவுக்கு எதிரான சேறு பூசும் பிரச்சாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே தாம் ஒன்றுகூடியதாக கொழும்பு வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், குழுவில் உள்ள பெரும்பாலான வயதான பெண்கள் தாங்கள் ஏன் கொழும்பில் கூடினர் என்பது பற்றி தெரியவில்லை.
"நான் ஏன் வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எங்களை வரச் சொன்னார்கள், நாங்கள் வந்தோம்" என்று பெண் ஒருவர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும் குறிப்பிட்டுள்ளார்.