மர ஆலையில் மீட்கப்பட்ட பெண் சடலம்; கொலை குறித்து ஆராய்வு
மர ஆலை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (02) பிற்பகல் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர ஆலையின் ஊழியர் ஒருவரும் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மர ஆலையின் உரிமையாளரான 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் இறந்தவரின் வாய் பகுதியை கத்தியால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்த இடத்தில் இருந்து அத்துருகிரிய பொலிஸ் நிலையம் நூறு மீற்றருக்கும் குறைவான தூரத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.