மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்
கஹதுடுவ ரிலாவல சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 62 வயதுடைய ரிலாவல பொல்கஸ் ஓவிட்டவில் வசிப்பவர் என கூறப்படுகின்றது.
இன்று காலை குறித்த பெண் கவனயீனமாக வீதியைக் கடக்க முயன்ற போது ஹொரணையிலிருந்து வேகமாக வந்த பஸ் ஒன்று மோதியதிலேயே அவர் உயிரிழந்தார். நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்தெபெண்ணி மோதியுள்ளது.
மஹரகமவிலுள்ள அபேக்ஷா மருத்துவமனை கிளினிக்குக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதர்கான நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.