குழந்தையை ஆற்றில் வீசிய பெண் பகீர் வாக்குமூலம்
வத்தளை - மட்டக்குளி பிரதான பாலத்திலிருந்து 5 வயது சிறுவனை தாயார் களனி ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிறுவனை வீசிவிட்டு அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தபோது அப்பகுதி மக்களால் காப்பாற்றப் ப்பட்டிருந்தார்.
ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் இதுவரையில் மீட்கப்படாத நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கைதான பெண் தற்போது சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதில் ,
குடும்ப நெருக்கடி காரணமாகவே தான் இதனை செய்துள்ளதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த கணவர் இறந்துவிட்டார் என கூறப்படுகின்றது.
அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் 15 வயது பிள்ளை உள்ளதாகவும் , 42 வயதான அந்த பெண் வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், அவர் சில காலமாக நோயினால் அவதிப்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.