குடும்ப தகராறு; விசாரிக்க சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!
கணவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கணவன் தனது மனைவியை தினமும் தாக்கி துன்புறுத்துவதாக பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட த தகவலின் அடிப்படையில் இரு பொலிஸார் உத்தியோகத்தர்கள் , குறித்த வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு
இதன்போது இந்த வீட்டில் இருந்த கணவர் தனது மனைவியை தாக்கி துன்புறுத்தி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்திக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முற்பட்டனர்.
அப் போது சந்தேக நபரின் மனைவி பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேக நபரின் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.