பல்பொருள் அங்காடிக்குள் பெண்ணின் கைவரிசை; காட்டிக்கொடுத்த கைப்பை!
நவீன பல்பொருள் அங்காடியொன்றில் சுமார் 12,000 ரூபாய் பெறுதியான பால்மா டின்களைத் திருடி கைப்பைக்குள் கொண்டுசெல்ல முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரகமயில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள், பொருட்கள் வாங்கும் போர்வையில் நுழைந்த குறித்த பெண், தனது கைப்பைக்குள் பால்மா டின்களை மறைத்து வைத்துள்ளார்.
அத்துடன் , சுமார் 300 ரூபாய் பெறுமதியான பொருட்களை வாங்கி காசாளருக்குப் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து , அங்காடியை விட்டு அப்பெண் வெளியேற முற்பட்டபோது, பாதுகாப்புப் பணியாளர்கள் சந்தேகநபரின் கைப்பையை சோதனையிட்டனர்.
இதன் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 ரூபாய் மதிப்புள்ள ஆறு பால்மா டின்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.