விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம்
தலத்துஓயா பொலிஸ் பிரிவில் மயிலாப்பிட்டிய பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பெண்ணாருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம்
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுமாத்தளன் கடற்கரையில் ஒரு சடலம் காணப்படுவதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடந்த 30 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.