கந்தானையில் ”அன்னை மரியாள்” போல சுற்றித்திரிந்த பெண்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
கம்பஹா - கந்தானை பகுதியில் சமீபத்தில் ‘அன்னை மரியாள்’ போன்ற ஆடைகளை அணிந்து சுற்றித்திரிந்த பெண் தொடர்பில் பொலிஸார் விபரங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகள் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுடன், குறித்த பெண்ணைப் பற்றி பல கேள்விகளை எழுப்பியது.
குறிப்பிட்ட சமூக இணையத்தளம் ஒன்றின் படி, கந்தானைப் பொலிஸாரிடம் இருந்து குறித்த பெண்ணிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு ரஷ்ய நாட்டவர் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அவர் தியானத்தில் ஈடுபட்டதாகவும், இலங்கைக்கு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளதாக கந்தானை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த பெண் எந்தவிதமான மனநோயினாலும் பாதிக்கப்படவில்லை என கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தியான உடையில் இருந்த குறித்த பெண் கந்தானையில் சுதந்திரமாக நடமாடிய போது, பல்வேறு காணொளி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.