யாத்திரை சென்ற பெண் தவறி விழுந்து பலி ; தீவிரமாகும் விசாரணைகள்
சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண்ணொருவர் நல்லதன்னி - சிவனொளிபாத மலை வீதியில் ஜப்பான் அமைதி விகாரைக்கு கீழே அமைந்துள்ள சிவப்பு பாலம் அருகில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ, வல்பிட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் கிராமவாசிகள் குழுவுடன் யாத்திரை பேருந்தில் சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்றுள்ள நிலையில், நேற்று (04) சிவனொளிபாத மலை யாத்திரையை முடித்துவிட்டு நல்லதன்னிய பகுதிக்கு மீண்டும் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்தை சந்தித்தார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மஸ்கெலியா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.