கணவனோடு தொடர்ந்து தகராறு ; தங்கையை கொடூரமாக கொன்ற அண்ணன்
குளித்தலை அருகே நங்கவரத்தை அடுத்த நச்சலூர் மேல நந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவராஜன், ராமாயி தம்பதியினர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கழுத்தை நெரித்துக் கொலை
இருவரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து ராமாயியின் அண்ணன் ராம் பிரசாத்திடம் தேவராஜன் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரிப்பதற்காக ராம் பிரசாத் ராமாயி வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார்.
அப்போது, தங்கையின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த ராம் பிரசாத், ராமாயியை தாக்கி, வேட்டியால் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
வீட்டுக்கு வந்த தேவராஜன் மனைவி உயிரிழந்து கிடப்பதை கண்டு, நங்கவரம் பொலிஸ் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த ராம் பிரசாத்தை நங்கவரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.