அனுராதபுரத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த பெண்!
அனுராதபுரம் - தம்புத்தேகம, தம்மன்னாவ பஹலகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03-07-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தம்மன்னாவையில் இருந்து பஹலகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதியும், பெண் பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.