கணவர் மற்றும் 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரனுடன் ஓட்டமெடுத்த பெண்!
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர், மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்நிலையில் ராஜு, ஹர்தோய் மாவட்ட பொலிஸில், அதில் தன்னையும், தனது 6 குழந்தைகளையும் தவிக்க விட்டு தனது மனைவி ராஜேஸ்வரி, அதே பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் என்பவருடன் ஓடி விட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் ராஜேஸ்வரியை அவர் ஓடிப் போன 3 தினங்களுக்குள் அவரை மீட்டுள்ள நிலையில், பிச்சைகாரரை தேடிவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ராஜேஸ்வரி ஓடிப் போன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.