குவைத்தில் திருகோணமலை பெண் மரணம் ; துயரத்தில் உறவுகள்
குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை தமிழ் பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப பொருளாதார தேவைகளுக்காக கடந்த 2023ஆம் ஆண்டு இவர் குவைத் நாட்டுக்கு சென்றிருந்தார்.

அங்கு பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு, பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஊடாகக் குடும்பத்தினர் உரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.