யாழ்ப்பாணத்தில் பிரான்ஸில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு; காரணத்தால் அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண் கொரோனா தொற்ரால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்திய்யுள்ளது.
உயிரிழந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.
பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சில தினங்களின் முன்னர் தென்னிலங்கையில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.