நீர்த்தேக்கத்தில் சடலமாக மிதந்த பெண் ; தீவிரமாகும் விசாரணை
கண்டி, ஹங்குரன்கெத்த வீதி, குருதெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்று முன்தினம் பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

மேலதிக விசாரணை
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், குறித்த பெண் சுமார் 50 முதல் 55 வயதுக்குட்பட்டவராகவும், சுமார் 05 அடி 02 அங்குல உயரம் கொண்ட பருமனான உடலமைப்பைக் கொண்டவராகவும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.