10 வகுப்பு சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த திருமணமான பெண் ; நீதிமன்றம் காட்டிய அதிரடி
தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

54 ஆண்டுகள் சிறை தண்டனை
அதன் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தியபோது லலிதா என்ற 38 வயது பெண் மாணவருடன் பழகி வந்தது தெரிய வந்தது. அவர் நடனம் கற்றுத்தருவதாக கூறி, குறித்த மாணவரை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவர் மீட்கப்பட்டு, அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இறுதி விசாரணையில் லலிதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதமும் விதிக்கப்பட்டது.