வீடு முழுவதும் சிசிடிவி வைத்து கண்காணித்த சைக்கோ கணவன்; திருமணமான 48 நாளில் பெண் விபரீத முடிவு!
புது மனைவியை கண்காணிக்க சிசிடிவி கணவனான மருத்துவர் வீடு முழுவது சிசிடிவி மாட்டி பெண்ணை கண்காணித்து கொடுமை செய்தததால் திருமணமான 48 நாளில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகே உள்ள தானே அம்பர்நாத் பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் விசாகா தில்கர். இவருக்கும், மருத்துவரான நிதின் தில்கர் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி திருமணம் நடந்தது.

கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் சித்ரவதை
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, வரதட்சணை குறைவாக கொடுத்ததாக கூறி விசாகாவை அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் சித்ரவதை செய்ய தொடங்கியுள்ளனர்.
விசாகாவின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில், அவரது கணவர் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, அவரது ஒவ்வொரு நகர்வையும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார்.
யாரிடமாவது பேசினால் கூட விசாகா அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசியதற்காக விசாகா புகுந்த வீட்டினரால் மிக கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடுமைகளை தாங்க முடியாமல், திருமணமான வெறும் 48 நாட்களிலேயே விசாகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் தொடர்பில் விசாகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் நிதின் தில்கர், மாமியார் சாயா மற்றும் மைத்துனர் நினத் ஆகிய மூவர் மீதும் சிவாஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.