பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பெண்; நான்கு அதிகாரிகள் நிறுத்தம்
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் 41வயதுடைய பெண் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண் பொலிஸாரும் அடங்குகின்றனர்.
பொலிஸில் முறைப்பாடு
பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் கொழும்பில் உள்ள சினிமா படத் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்தார்.
அந்த வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதையடுத்து வீட்டுரிமையாளரினால் கடந்த 11ஆம் திகதி வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டாது.
அது தொடர்பில் , வீட்டு பணிப்பெண்னை விசாரனைக்காக பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அப் பெண்னை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் தலைமையில் பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நான்கு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.