கொதிக்கும் சாம்பாரில் விழுந்து உயிரிழந்த பெண்
விஜயவாடாவில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் விஜயவாடாவில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிறைய பேருக்கு அன்னதானம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலைகள் துவங்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெரிய பாத்திரத்தில் சாம்பார் தயார் செய்யப்பட்டது. அப்போது சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 46 வயது பெண் சுஜாதா சாம்பாரை தூக்கும்போது கால் இடறி கொதிக்கும் சாம்பாரில் விழுந்து விட்டார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணமடைந்துவிட்டார். இது தொடர்பாக அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.